CC Tamil
ஒவ்வொரு பிராந்தியத்தில் உள்ள சிறப்பான விஷயங்களையும், பிரத்தியேக நகைச்சுவைகளையும் மற்றும் அங்குள்ள திறமையாளர்களையும் கண்டறிவதே counter culture காமெடி கிளப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த குறிக்கோளுடன் சென்னையின் முதல் காமெடி கிளப்-பை ஆரம்பித்த நாங்கள் இதில் வெற்றியும் கண்டுள்ளோம். தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடிக்கென ஒரு தனி ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் எங்களின் பங்கும் சிறிது இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பொழுது எங்களது அடுத்த இலக்கு ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்கே செல்வது. ஆம், இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றுடன் counter culture காமெடி கிளப் கைக்கோர்க்க உள்ளோம் !!!! இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக – உங்கள் வீடு தேடி எங்கள் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் வரபோகிறார்கள். பிரதான ஊடகங்களில் எங்களுக்கு இது ஒரு ஆரம்பம். எங்களுடன், இதை இணைந்து வழங்குவோர் சென்னையின் பிரபலமான FM – ரேடியோ மிர்ச்சி. ஸ்டாண்ட் அப் காமெடியில் தமிழின் பாணி தனித்து இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமும் கூட.
முக்கியமான விஷயம். இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா !!!!
Regional content has always been the focus for CounterCulture. With the establishment of the very first comedy club in Chennai, CounterCulture managed to slice a nice big chunk of the Tamizh pie as well. Beginning with our focus on Tamizh comedy, we now also work with Tamizh mainstream media. The oldest television channel in the country joined hands with CounterCulture in order to bring out, for the very first time, Tamizh-focused Stand Up Comedy on mainstream television. This also marks our entry into media.
CounterCulture has also partnered with Radio Mirchi, the city’s largest Tamizh radio station to create curated Tamizh content whereby promoting regional Tamizh talent as well as content.
We aren’t just stopping there. We have only just begun.